அக்டோபர் 7ம் திகதி தாக்குதல்களுக்குப் பின், காசாவில், நடைபெற்று வரும் பெரும் மோதல்கள், பலகட்டப் பேச்சுவார்த்தைகளின் பின் இருதரப்பும் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளன.
நேற்று கத்தார் தலைநகரில் கைச்சாத்தாகிய இப் போர் நிறுத்தம் இன்று காலை 7 மணிமுதல் அமுலுக்கு வருகிறது. இந்தப் போர்நிறுத்தத்தின் குறிப்பிடத்தக்க முக்கிய அம்சமாக, பணயக்கைதிகள் மற்றும் கைதிகள் முதல் பரிமாற்றம் இன்று பிற்பகலில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகளுக்கு இடையிலான முதல் பரிமாற்றம் இன்று திட்டமிடப்பட்டுள்ள வகையில் பிற்பகல் 4 மணிக்கு (உள்ளூர் நேரம்) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் திகதி தாக்குதல்களுக்குப் பிறகு ஹமாஸால் கடத்தப்பட்ட 13 பேர் (240 க்கும் மேற்பட்டவர்கள்) விடுவிக்கப்படலாம் என்றும், இருப்பினும், முதல் தவணையில் எத்தனை கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் அல்லது பரிமாற்றம் எங்கு நடைபெறும் என்பது தெரியவில்லை. தோஹாவில் இருந்து செஞ்சிலுவைச் சங்கமும் இதில் ஈடுபடும் என்று தெரியப்படுத்தினர், ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக சரியான இடம் மற்றும் முறைகள் வெளியிடப்படவில்லை.
காசாவில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே குறைந்தது நான்கு நாட்கள் போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.