website analysis

தடைப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்துள்ளார்.

இலங்கையில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என ஆட்கள் பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜி.பிரதீப் சபுதந்திரி தெரிவித்தார்.

வருடாந்தம் 80 மில்லியன் வர்த்தகம் செய்யும் ஒவ்வொரு வியாபாரமும் அல்லது தொழிற்துறையும் பெறுமதி சேர் வரியில் (VAT) பதிவு செய்யப்பட வேண்டும், மேலும் அனைவரும் பார்க்கும் வகையில் VAT பதிவு சான்றிதழ் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே தமது கட்சியின் வருங்கால ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவர் என நேற்று தெரிவித்திருந்தார்.

இலங்கையில் மரக்கறிகளின் விலை உயர்வைத் தணிக்க வீட்டுத் தோட்டங்களைப் பராமரிக்குமாறு பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

More Articles …