அநுராதபுரம் ரத்மலே திஸ்ஸ மகா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் பரீட்சை நிலையத்தில் கடமையாற்றிய கண்காணிப்பாளர் உட்பட மூவரை பணி இடைநிறுத்தம் செய்யவுள்ளதாக வடமத்திய மாகாண கல்வி பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ. சமரகோன் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் காலம் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில், குறித்த காலக்கெடுவிற்குப் பின்னர் சட்டவிரோத பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து அமைக்கப்படும் சஜித் பிரேமதாச அரசாங்கத்தின் கீழ் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை மீண்டும் ஒருமுறை நடத்தப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்களின் பிரசாரங்களுக்கு நிலையான நடைமுறைகளுக்கு அமைவாக கட்டண அடிப்படையில் மட்டுமே விமானங்களை வழங்குவதாக இலங்கை விமானப்படை (SLAF) தெளிவுபடுத்தியுள்ளது.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளை கையடக்கத் தொலைபேசி மூலம் பகிர்ந்ததாக கூறப்படும் அனுராதபுரத்தில் உள்ள பரீட்சை நிலையமொன்றில் உள்ள பாடசாலை அதிபர் உட்பட 6 ஆசிரியர்கள் பரீட்சை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி (NPP) திங்கட்கிழமை (16) இலங்கையில் அதானி குழுமத்தின் காற்றாலை மின்சாரத் திட்டத்தை வார இறுதியில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டால் ரத்து செய்வதாக உறுதியளித்ததாக PTI செய்திச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.