200 க்கும் மேற்பட்ட பொதுத்துறை தொழிற்சங்கங்கள் நேற்று (8) சுகயீன விடுப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன, அது இன்றும் (9) தொடர்வதாக மாகாண பொதுச் சேவை சங்கங்களின் கூட்டுக்குழு தெரிவித்துள்ளது.
சம்பள உயர்வு மற்றும் ரூ.25,000 கொடுப்பனவு வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. எவ்வாறாயினும், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) மற்றும் தாதியர் சங்கம் ஆகியவை வேலைநிறுத்தத்தில் ஈடுபடவில்லை, இது சுகாதார சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது.
தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்கத் தவறினால் நாளை கொழும்பில் ஒன்று கூடி தமது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிப்பதாக தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.