இலங்கைத் தலைநகர் பொழும்பிலுள்ள மருதானைப் பகுதி பொலிஸ் காவல் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்திலும் டெல்டா மாறுபாடு !
கொரோனா வைரஸின் இந்திய மாறுபாடான டெல்டா வைரஸ் திரிபு யாழ்ப்பாணத்திற்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொற்றும் வேகம் அதிகமான, டெல்டா மாறுபாடு, இலங்கையில் இதுவரை கொழும்பில் மட்டுமே அடையாளம் காணப்பட்டிருந்தது.
இலங்கை முழுவதும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது !
இலங்கையில் நடைமுறையிலுள்ள கோவிட்- 19 பாதுகாப்பு நடைமுறைத் தனிமைப்படுத்தல் விதிகளை மீறுபவர்ள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், மேலும் 190 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்புக்குப் பயணித்த யாழ். பேரூந்து பாதிவழியில் திருப்பி அனுப்பப்பட்டது !
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று மீண்டும் யாழ்ப்பாணத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது. இந்தப் பேரூந்தில் பயணித்தவர்களில் பலரும், அத்தியாவசிய தேவைகளின்றி பயணித்தவர்களாக இருந்தமையே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
த.தே.கூ.வின் தலைமைப் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்குவதற்கான முயற்சிகள் நடைபெறவில்லை: மாவை சேனாதிராஜா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகள் எவையும் இடம்பெறவில்லை என்று கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை இலங்கை இழக்கும் அபாயம் இல்லை: தினேஷ் குணவர்த்தன
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையை இழக்கும் அபாயம் இல்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி பெற்றவர்களுக்கு டிஜிட்டல் அட்டை!
கொரோனா வைரஸ் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்ற அனைத்து இலங்கையர்களுக்கும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட, தடுப்பூசி டிஜிட்டல் அட்டை (Digital Vaccine Card) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.