free website hit counter

அரசாங்கத்துடன் இரகசிய ஒப்பந்தம் எதுவும் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வரவு செலவுத் திட்டதை ஆதரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் எதிர்வரும் 21ம் திகதி முடிவு செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அக்குறனை பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
“இந்த வரவு செலவுத் திட்டம் குறித்து நாங்கள் திருப்தியடையவில்லை. இந்நிலையில், வரவு செலவுத் திட்டத்தை ஆதரிப்பதா இல்லையா என்பது குறித்து 21ம் திகதி கட்சி மத்திய குழு கூடி முடிவெடுக்கும்.

நான் அண்மையில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து பேசியிருந்த நிலையில், அரசாங்கத்துடன் எமக்கு ஒப்பந்தம் இருப்பதாக சிலர் கருதுகின்றனர். அரசாங்கத்துடன் எங்களுக்கு அத்தகைய ஒப்பந்தம் எதுவும் இல்லை.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த ஒன்பது வருடங்களில் நான் அந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டேன். அந்த நேரத்தில் ஜனாதிபதி ராஜபக்சவும் நானும் வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்வதற்கும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் பல பணிகளை செய்தோம்.

நாட்டுக்காக உழைத்த சிறந்த தலைவர் என்பதை அவர் நிரூபித்துள்ளார். ஆனால் தற்போதைய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து நாடு பின்னோக்கிச் செல்வதுதான் நடந்துள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.

இலங்கையின் சினிமா துறைக்கு ஊக்குவிப்பு மற்றும் சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் வகையில் சினிமா துறையை ஒரு தொழில்துறையாக பதிவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையில் நாளை 17ஆம் திகதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட் 19 மூன்றாவது தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் திறக்கப்படும் என்று கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன, அறிவித்துள்ளார்.

நாட்டில் தனியார் சேமிப்பு மாத்திரமல்லாது அரசாங்கத்தின் வருமானமும் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …