free website hit counter

‘வாக்குறுதி அரசியல்’ காரணமாக இலங்கையின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது – ஜனாதிபதி

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
குறிப்பாக தேர்தலுக்கு தயாராகும் போது நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கான விரிவான திட்டத்தை வகுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து அரசியல் கட்சிகளிடமும் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் உள்ள இலங்கை சுங்கத் தலைமையகத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அரச தலைவர், ‘வாக்குறுதி அரசியல்’ காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வலியுறுத்தினார்.

ஆண்டுதோறும் ஜனவரி 26ஆம் திகதி அனுசரிக்கப்படும் சர்வதேச சுங்க தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

மேலும், கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, சாத்தியமான மாற்று முன்மொழிவுகள் தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) கலந்துரையாடுவதற்கு ஒன்றிணையுமாறு அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவிற்கு இந்த முக்கியமான உரையாடலுக்காக இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுக்க அவர் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: