free website hit counter

கட்சியின் தீர்மானங்களை மீறும் உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யும் SLPP

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுபவர்களின் கட்சி உறுப்புரிமையை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலிட்பீரோவில் இந்த தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எழுத்து மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் வேட்பாளரை நிறுத்துவதற்கான யோசனைகளை கட்சி ஏற்றுக்கொண்டுள்ள பின்னணியில், கட்சிக்கு தெரியாமல் அல்லது நேரடியாக செயற்பட்டால் அல்லது ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் உறுப்பினர் எவரேனும் தன்னை முன்னிறுத்தினால் அல்லது கட்சியால் முன்வைக்கப்படும் வேட்பாளருக்கு எதிராக மறைமுகமாக, கட்சியில் அந்த உறுப்பினர் எந்த பதவியை வகித்தாலும் அந்த உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நபரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்படும்.

மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை தவிர வேறு எந்த வேட்பாளரையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரிக்கும் அல்லது கட்சி எடுக்கும் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படும் எந்தவொரு கட்சி உறுப்பினருக்கும் இது பொருந்தும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: