தற்போது தனித்து செயற்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) உறுப்பினர்கள் எதிர்வரும் காலங்களில் மீண்டும் கட்சிக்கு வர நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
"குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக" குறிப்பிட்ட நபர்கள் தங்கள் கட்சியை ஆதரிக்காமல், தேர்தலின் போது மற்ற கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக அவர் கூறினார்.
அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.