free website hit counter

டொலர் நெருக்கடியால் மீண்டும் நாட்டில் ஏற்பட்ட பாரிய தட்டுப்பாடு!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இலங்கை கடும் டொலர் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், வர்த்தக வங்கிகளால் கடனுதவி வழங்கப்படாமையால் மூன்று எரிவாயு தாங்கிகள் இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாடு தற்போது கடும் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு முகங்கொடுத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் லிட்ரோ எரிவாயு விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் நாட்டின் பெரும்பாலான பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அந்தந்தப் பகுதிகளில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்துள்ளனர்.

எரிவாயு பற்றாக்குறையால், தொழிற்சாலைகள் மற்றும் பெரிய அளவிலான ஹோட்டல்கள் , பேக்கரிகளின் செயற்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

எரிவாயு பற்றாக்குறையால் சுமார் 1000 பேக்கரிகள் ஏற்கனவே தமது செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

இலங்கை வர்த்தக வங்கிகளினால் கடனுதவி வழங்கப்படாமையால் கடந்த 6 நாட்களாக இலங்கை கடற்பரப்பில் மூன்று எரிவாயு தாங்கிகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, எரிவாயு தட்டுப்பாட்டைக் கண்டித்து கடந்த சில நாட்களாக நாட்டின் சில பிரதேசங்களில் பொதுமக்கள் போராட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: