முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு வலைவீசுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கையானது அரசாங்கத்தின் முற்போக்கான நடவடிக்கை என பாராட்டியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதைப்பொருள் இளம் தலைமுறையை சீரழித்துள்ளது. போதைப்பொருள் ஒட்டுமொத்த நாட்டையும், இளைய தலைமுறையினரையும் அழித்துவிட்டது.எனவே, போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு வலைவீசுவது அரசின் நல்ல நடவடிக்கையாகும் என்றார்.