free website hit counter

Sidebar

18
செ, மார்
24 New Articles

நான் SJBயில் சேரவில்லை: அர்ஜுன ரணதுங்க

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்ட தலவாக்கலையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதிலும், தான் சமகி ஜன பலவேகய கட்சியில் இணைந்து கொண்டதாக வெளியான தகவலை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க மறுத்துள்ளார்.
தலவாக்கலையில் கட்சி ஏற்பாடு செய்திருந்த மே தினக் கூட்டத்திற்கு எம்.பி பழனி திகாம்பரம் என்னை அழைத்தார். அது SJBயால் ஏற்பாடு செய்யப்படவில்லை. நான் எஸ்.ஜே.பி.யில் சேரவில்லை.

எனினும் இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள ஊழலை ஒழிப்பதற்கு பிரேமதாச முயற்சி மேற்கொண்டுள்ளமையால் நான் அவரைப் பாராட்டுகின்றேன். கிரிக்கெட் ஊழலைப் பற்றி பிரேமதாச பல தடவைகள் பாராளுமன்றத்தில் பேசினார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula