சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்கான கட்டணம் இன்று (பிப்ரவரி 01) முதல் அமுலுக்கு வரும் வகையில் 5,000 ரூபாவிலிருந்து 10,000 ரூபாவாக திருத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்தார்.