free website hit counter

மாணவர்கள் இடையில் மோதல் - மூடப்பட்டது சப்ரகமுவ பல்கலைக்கழகம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
2020/2021 வருட மாணவர்களைத் தவிர சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர்களுக்கும் மறு அறிவித்தல் வரும் வரை பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் முதலாம் வருடம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாணவர்களுக்கும் காலவரையறையற்ற விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் சிலரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (16) மாலை 4 மணிக்கு முன்னர் அனைத்து மாணவர்களும் தங்களின் விடுதிகளிலிருந்து வௌியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டதாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் உதய ரத்நாயக்க குறிப்பிட்டார்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் நேற்று (15) இரவு இடம்பெற்ற மோதலில் மாணவர்கள் ஒன்பது (09) காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction