2023 ஆம் ஆண்டுக்கான அனைத்து போனஸ் மற்றும் மேலதிக கொடுப்பனவுகளை ஊழியர்களுக்கு வழங்குவதை தவிர்க்குமாறு இலங்கை மின்சார சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2015 ஆம் ஆண்டு முதல் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த 25% சம்பள அதிகரிப்பை இந்த வருடத்திற்கு நிறுத்துமாறும் போனஸ் மற்றும் மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதை தவிர்க்குமாறும் இலங்கை மின்சார சபைக்கு மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த நடவடிக்கையானது மின்சார சபையின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகச் செலவுகளை மேலும் குறைக்கும் முயற்சி என்று X தளத்தில் அமைச்சர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக மின்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு கீழ்வருமாறு.