இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்களுடன் செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தங்களை புதுப்பிக்க போவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
"ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் 25% சம்பள உயர்வு, வருடாந்த போனஸ், கொடுப்பனவுகள் மற்றும் இதர சலுகைகள் என CEB மற்றும் CPC ஆகியவற்றின் தொழிற்சங்கங்களுடன் செய்துகொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தங்கள் தொடரப்படமாட்டாது அல்லது புதுப்பிக்கப்படாது" என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.