free website hit counter

அனுரகுமார தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று கொழும்பில் வெளியிட்டார்.
"வளமான நாடு, அழகான வாழ்க்கை" என்ற தலைப்பிலான NPP யின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் நிகழ்வில் NPP தலைவர், ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க, கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பல மதத் தலைவர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய NPP பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய, பல கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை முன்வைத்தாலும், அவர்கள் அலுவலகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் முற்றாக அவற்றிற்கு எதிராகவே செயற்படுவதாக தெரிவித்தார்.

மேலும், NPP தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் தங்கள் கட்சியின் சமூக ஒப்பந்தத்தை நாட்டு மக்களிடம் முன்வைப்பதாகவும், அதற்கான ஒப்பந்தத்தின்படி தான் நாட்டின் ஆட்சியை நிறைவேற்றுவார்கள் என்றும் அவர் கூறினார்.
தமிழ் விஞ்ஞாபனம்
-AdaDerana
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: