தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, அதன் தலைவர் சஜித் பிரேமதாஸவுடனான விவாதத்திற்கு சமகி ஜன பலவேகய (SJB) முன்மொழிந்த தேதிகளில் இருந்து ஜூன் 06 ஆம் தேதியை ஏற்றுக்கொண்டார்.
உத்தேச ‘அநுர – சஜித்’ விவாதத்திற்கான கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான NPP செயற்குழு உறுப்பினர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, திங்கட்கிழமை (20) ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.
இதன்படி, உத்தேச விவாதத்தை ஒருங்கிணைப்பதற்காக ‘சமகி ஜன பலவேகய’வினால் நியமிக்கப்பட்டுள்ள எஸ்.ஜே.பி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவுடன் விவாதம் நடைபெறும் இடம், நேரம், நோக்கம் போன்ற ஏனைய விபரங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக கலாநிதி ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.