free website hit counter

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு.
2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைவாக உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இந்த மாத இறுதியில் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள்களுக்கான முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டாளர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை எதிர்வரும் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: