இந்த வருடம் G.C.E.சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான G.C.E. உயர்தர வகுப்புகள் 2024 ஜூன் 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான சுற்றறிக்கை ஏற்கனவே கல்வி அமைச்சினால் அனைத்து மாகாணங்களின் கல்வி அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரையில் சுற்றறிக்கை கிடைக்கப்பெறாத பாடசாலை அதிபர்கள் குறித்த மாகாண மற்றும் வலயக் கல்வி அலுவலகங்களில் வினவலாம் எனவும், மாணவர்கள் தமது பாடசாலை அதிபர்களிடம் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.