உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்குப் பின்னால் பாரிய சதி உள்ளதாக சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.
எனவே, 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பாக ஒரு முடிவை எட்டுவதற்கு முன்னர் சாட்சியங்கள் மற்றும் புலனாய்வு பிரிவின் தகவல்கள் சரியான முறையில் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேரங்கள், இலக்குகள், இடங்கள், தாக்குதல்களின் முறை மற்றும் பிற தகவல்களுடன் அரச புலனாய்வு துறையின் தகவல்கள் ஒரு பெரிய சதித்திட்டம் இருந்ததற்கான சான்றாக இருப்பதாகவும் சட்டமா அதிபர் கூறியுள்ளார்.
தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய விசேட செவ்விலிலேயே அவர் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரி நௌபர் மௌலவி என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்த கருத்து தொடர்பாக பேசிய சட்டமா அதிபர், தாக்குதல்களை நடத்துவதற்கான சதித்திட்டத்தில் நௌபர் மௌலவி ஒரு முக்கிய நபராக இருந்தாலும், அவர் சூத்திரதாரி என்பதை உறுதிப்படுத்த முடியாது என்றுள்ளார்.