free website hit counter

இரண்டாவது லங்கா ப்ரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில், கோல் க்ளடியேட்டர்ஸ் அணியுடன் ஜப்னா கிங்ஸ் அணி மோதவுள்ளது.

தம்புள்ள ஜயண்ட்ஸ் அணியுடன் நேற்றிரவு இடம்பெற்ற இரண்டாம் தகுதிகாண் போட்டியில், 23 ஓட்டங்களால் வெற்றிபெற்ற ஜப்னா கிங்ஸ் அணி, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 210 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில், அவிஸ்க பெர்னாண்டோ அதிகபட்சமாக 100 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க, ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் 70 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இதையடுத்து, 211 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் சாமிக்க கருணாரத்ன ஆட்டமிழக்கா அதிகபட்சமாக 75 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இரண்டாவது லங்கா ப்ரமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில், ஜப்னா கிங்ஸ் மற்றும் கோல் க்ளடியேட்டர்ஸ் அணிகள் நாளை மோதவுள்ளன.

முதலாவது லங்கா ப்ரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் இந்த இரு அணிகளும் மோதிய நிலையில், ஜப்னா அணி சம்பியனானமை குறிப்பிடத்தக்கது.

தான் கடந்து வந்த கடினமான பாதை குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் மனம் திறந்துள்ளார்.

26-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயினின் வெல்வா நகரில் நடந்து வருகிறது.

பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

வதந்திகள் குறித்து கடந்த 2 ஆண்டுகளாக விளக்கமளித்து ஓய்ந்து விட்டதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …