free website hit counter

யூரோ 2024 கிண்ணத்தினை வென்றது ஸ்பானியா !

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யூரோ 2024 கிண்ணத்திற்கான  இறுதி ஆட்டத்தில்  2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய அணி எதிர்த்து ஆடிய இங்கிலாந்து அணியை வெற்றி கொண்டது.  

ஆரம்பம் முதல்  மிகவும் தந்திரோபாயமான போட்டியாகவும் அதே நேரத்தில் மிகவும் சலிப்பாகவும்  முதல் பாதி ஆட்டம் இருந்தது. இந்த இறுதிப் போட்டி நடைபெற்ற  பெர்லின் ஸ்டேடியத்தில் நிறைந்திருந்த பார்வையாளர்களிடத்தில் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தது. 

இடைவேளைலரை ஆட்டத்தில் எந்தவொரு அணியும், கோல்  போடாதிருந்த நிலையில், இரண்டாவது பாதியில் ஆட்டம் சூடுபிடித்தது.  இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கிய இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில்,  ஸ்பெயின் அணியின் வீரர், நிகோ வில்லியம்ஸ், தனது அணிக்கான முதற் கோலை மிக இலாவகமாக விழுத்தித்தினார். நிமிடங்கள் செல்ல செல்ல, இங்கிலாந்தும் கடுமையாகப் போராடிய நிலையில், 73வது நிமிடத்தில், ஆடுகளத்திற்குள் புதிதாக வந்த பால்மர் அடித்த கோல் மூலம்,  வெற்றியைச் சம நிலைக்கு  (1-1) கொண்டு வந்தார். 

இரு அணிகளும் கடுமையாகப் போட்டியிட்டு, ஆட்டத்தின் வெற்றியைக் கூடுதல் நேரத்தில் தீர்மானிக்க வேண்டி வரலாம் என்று தோன்றியபோது, ​​​​ஸ்பானிய அணி வீரர், ஓயர்சபாலின் ஃபிளாஷ் தனது அணிக்கான மற்றுமொருகோலை அடித்து,  2-1 என்ற புள்ளி நிலையைத் தோற்றுவித்தார்.  ஆனாலும் இந்தக் கோல் உண்மையில் வெற்றிகரமானதா என்ற சந்தேகம் பார்வையாளரிடமிருந்த நிலையில், அதனை படவிளக்கம் மூலம் தீர்த்து, சரியென  உறுதி செய்யப்பட்டது.

ஆட்டத்தின் இறுதி நேரத்தில் நிகழ்ந்த இந்த மாற்றத்தின் மூலம்,  ஐரோப்பிய கோப்பையை இந்த ஆண்டு ஸ்பெயின்  வெல்ல முடிந்தது. இதன் மூலம், ஸ்பானிய அணியின் வெற்றி வரலாற்றில் 1964, 2008 மற்றும் 2012 இல் வெற்றி பெற்ற பிறகு இந்த ஆண்டில் பெற்ற இந்த நான்காவது வெற்றி, அந்த அணியை, ஜெர்மனி (3), இத்தாலி (2) மற்றும் பிரான்ஸ் ஆகிய வெற்றி அணிகள் எல்லாவற்றுக்கும் முன்னிலையில் தரநிலைப்படுத்திய வெற்றியாகவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction