2024 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் இம்முறை பிரான்ஸின் பாரிஸ் நகரில் வருகின்ற 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
இந்நிலையில் ஒலிம்பிக் தீபச்சுடர் ஏந்தி வலம் வரும் பயணம் தற்போது பிரான்ஸின் முக்கிய நகரங்களை சந்தித்து கடந்து வருகிறது.
இதன் போது பிரபல பிரெஞ்சு கலைஞர் ஜே.ஆர் கையில் வலம் வருவதற்காக ஒலிப்பிக் தீபச் சுடர்; புகழ் பெற்ற சின்னங்களின் ஒன்றான (லூவ்ரே) Louvre பிரமிட் முன் கொடுக்கப்பட்டது.
ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகளுக்கும் முன்பு கிரேக்கத்தில் தொடங்கும் பாரம்பரியத்தின் உச்சக்கட்டமாக இந்த ஒலிம்பிக் சுடர் ஓட்டம் உள்ளது. மத்திய தரைக்கடலைக் கடந்து மார்சேயில் இறங்கிய பிறகு, சுடர் பிரான்ஸ் முழுவதும் தனது மூன்று மாத பயணத்தைத் தொடங்கியது. 400 க்கும் மேற்பட்ட பிரெஞ்சு நகரங்கள் மற்றும் தெருக்கள் வழியாகச் செல்வது, வரவிருக்கும் நிகழ்வைப் பற்றி பொதுமக்களை உற்சாகப்படுத்துவதற்கான ஒரு வழியாகும்.
இந்த ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தில் பங்கெடுத்த 10,000 பேர்களில் கலைஞர் ஜே.ஆர் உம் ஒருவராவார். பிரெஞ்சு பனிச்சறுக்கு வீரர் சாண்ட்ரா லாரா ஒலிம்பிக் சுடரைக் புகழ்பெற்ற லூவ்ரே கண்ணாடி பிரமிட் முன் கொடுத்தார். முன் ஒரு சமயம் தனது திறமையால் புகழ்பெற்ற அதே லூவ்ரே கண்ணாடி பிரமிட் கட்டிடத்தை ஒரு வியத்தகு ஒளியியல் மாயை அதைச் சுற்றி அமைத்துக்காட்டியவர் ஜே.ஆர். என்பது குறிப்பிடதக்கது.
நேர்த்தியான மிக எளிமை வடிவம் கொண்ட தீபச்சுடரை ஏந்திய வண்ணம், அங்கே உள்ள அருங்காட்சியத்திற்குள் தன் சுற்றுப்பயணத்தை ஜே.ஆர் மேற்கொண்டார். தனது சமூக லைத்தளத்திலும் தீபச்சுடருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், காணொளிகளை உற்சாகமாக பகிர்ந்துகொண்டார்.
பிரெஞ்சு கலையின் பிரகாசமான பிரதிநிதியான ஜே.ஆர்; ஒலிம்பிக் விளையாட்டுகளுடன் நீண்ட வரலாற்றைக் கொண்டவர். 2016 ஆம் ஆண்டில், கோடைகால ஒலிம்பிக்கின் நினைவாக ரியோ டி ஜெனிரோ முழுவதும் விளையாட்டு வீரர்களின் மகத்தான படங்களை நிறுவியர் ஆவர். ஆக பாரிஸ் ஒலிம்பிக் தீபச்சுடர் ஏந்தும் பட்டியலில் இவரை சேர்த்திருப்பது பொருத்தமானதே என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இறுதியாக ஜூலை 26 அன்று ஒலிம்பிக் சுடர் ஓட்டம் நிறைவடைந்து பாரிஸ் நகரின் Tuileries பூங்காவில் ஏற்றப்படவுள்ளது.
Source : Mymodernmet