free website hit counter

மீண்டும் இலங்கையில் பயிற்றுவிப்பாளர் அவதாரமெடுக்கும் மிக்கி ஆதர்

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.
எல்.பி.எல் இதுவரையில் 2 தொடர்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் தொடரில், கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இம்முறை LPL தொடருக்கான அணி உரிமையாளர்களில் எந்தவித மாற்றமும் இல்லை என குறிப்பிட்ட இவர், திட்டமிட்டவாறு டிசம்பர் 6ம் திகதி முதல் 23ம் திகதிவரை போட்டிகள் நடைபெறும் என்பதையும் குறிப்பிட்டார். மிக்கி ஆர்தர் தொடர்பில் குறிப்பிட்ட இவர், ‘பயிற்றுவிப்பு குழாத்தை பொருத்தவரை கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக மிக்கி ஆர்தர் வருகின்றார். இதுதான் புதிய வரவாக உள்ளது. இலங்கை அணிக்கு பயிற்றுவிப்பாளராக இருந்த ஒருவர் மீண்டும் இங்கு வருவது எமக்கு பெருமையான விடயம்’ என டொடன்வெல தெரிவித்தார்.

இதேவேளை ஆகஸ்ட் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டதால் சில வெளிநாட்டு வீரர்கள் தொடரிலிருந்து விலகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள இவர், அவர்களுக்கான மாற்று வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். லங்கா பிரீமியர் லீக் தொடரானது டிசம்பர் 6ம் திகதி முதல் 23ம் திகதிவரை கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானம், கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: