தமிழக சட்டப்பேரவை 2026 தேர்தலுக்காக, அரசியற் கட்சிகள் அணிகளாக கூட்டுச் சேரும் கரபரப்புக்காட்சிகள் தொடங்கியுள்ளன.
அதிமுக, பாஜக, இணையும் NDA கூட்டணியில், மேலும் சில கட்சிகள் இணைந்துள்ள நிலையில், அந்தக் கூட்டணி வலுவான நிலையில் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த பல தேர்தல்களில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட திமுக, காங்கிரஸ் கூட்டணிக்குள் இழுபறிநிலை இருப்பதாகச் சொல்லப்படுகிறது. திமுகவுடன் கூட்டணி உறவை முறித்துக் கொண்டு, புதிய கட்சியான த.வெ.க வுடன் கூட்டணி அமைப்பது, காங்கிரஸ் கட்சி, பல மாநிலங்களிலும் பெற்று வரும் தொடர் தோல்விகளுக்கு மாற்றாக அமையும் என, காங்கிரஸ் கட்சியில், குறிப்பாக ராகுல்காந்தியும், அவரைச்சார்ந்தவர்களும் கருதுவதாகத் தெரியவருகிறது.
இந்நிலையில் காங்கிரசை தமது கூட்டணயில் வைத்துக் கொள்ள வேண்டும் எனும் திமுகவிருப்பத்தினை, டெல்லி சென்று, ராகுல் காந்தியிடம் நேரில் திமுக உறுப்பினர் கனிமொழி அவர்கள் சென்று பேசியிருப்பதாகவும், இன்னமும் இறுதி முடிவு எட்டபடவில்லை என்றும் அறியவருகிறது.
எல்லாத் குதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக, விஜயின் தமிழக வெற்றி கழகம் அறிவித்துள்ள போதும், கிரஸ் தங்களுடன் வந்து இணையுமெனும் விருப்பத்தினையும், எதிர்பார்ப்பினையும், அக்கட்சி கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆயினும் எந்த முடிவுகளும் எட்டப்படாதிருக்கும் நிலையில், காங்கிரஸ் யாருடன் கூட்டுச் சேரும் எனும் உங்கள் எண்ணத்தினை அருகே இருக்கும் கணிப்புப் பெட்டியில் பதிவு செய்யுங்கள் பார்க்கலாம்...
