உருமாற்றம் பெற்ற புதுவகை "ஒமிக்ரான்"கொரோனா வைரஸ் சொல்லும் அறிவியல் உண்மை கட்டாயத் தடுப்பூசி தேவையில்லை என்பதே என்று மக்கள் மருத்துவர் புகழேந்தி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தமிழ்நாட்டின் சுகாதாரத் துறைக்கு 8 கேள்விகளை முன் வைத்துள்ளார். அவை வருமாறு:
பொது சுகாதாரத்துறை இயக்குனருக்கானகொரோனா தடுப்பூசி கட்டாயமாக்குதல் குறித்தான கேள்விகள்-
1.தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கட்டாய தடுப்பூசிக்கான தேவை என்ன?
2.லேன்செட் ஆய்வு கட்டுரையின்படி தடுப்பூசி செலுத்திய/செலுத்தாதவர் மத்தியில் நோய்பரப்பும் தன்மை என வரும்போது பெருமளவு வேறுபாடின்றி இரு தரப்பும் நோயை பரப்பும்போது கட்டாய தடுப்பூசி ஏன் தேவை?
3.அமெரிக்கா போன்ற நாடுகளில் தடுப்பூசி செலுத்துவது சென்ற வருடத்தைவிட இந்த வருடம் அதிகம் இருந்தும், கொரோனா இறப்புகள் அதிகமாக உள்ளதிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ள வேண்டும்?
4.உலக சுகாதார நிறுவனம்/அதன் தலைவர், தடுப்பூசிகள் மட்டுமே இக்கொள்ளை நோயை கட்டுக்ககுள் கொண்டுவர முடியாது என தெளிவாக கூறிய நிலையில்(ஐரோப்பிய நாடுகளின் கொரோனா பரவலை கணக்கில் கொண்டு) தடுப்பூசி கட்டாயம் என்பது தேவை தானா?
5.மந்தை தடுப்பு சக்தி(Herd immunity) -க்கு 100% பேர் தடுப்பூசி செலுத்த தேவையில்லை என்ற நிலையில் கட்டாய தடுப்பூசியின் தேவை என்ன?
6.கேரளாவில் 2 தடுப்பூசி செலுத்தியவர்கள் அதிகம் கொரோனாவால் பாதிக்கப்படுவது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட நிலையில் தமிழகத்திலும் அது போன்று நடக்காதா?
7.தடுப்பூசி/சேர்க்கப்படும் (Compoments&adjuvants)பொருட்களுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் தடுப்பூசியால் பாதிக்கும்/இறக்கும் நிகழ்வு நடக்க வாய்ப்புள்ள நிலையில் தடுப்பூசி கட்டாயம் என்பது பிரச்சனைகளை எழுப்பாதா??
8.மத்திய அரசோ/மாநில அரசோ, தடுப்பூசி கட்டாயம் என ஏன் அவசர சட்டம்/உத்தரவு பிறபிக்கவில்லை? சட்டம் அளித்த தனிமனித உரிமைகளை தடுப்பூசி கட்டாயம் என்பது பாதிக்காதா?.
இப்படிக்கு
மரு.வீ.புகழேந்தி.
மருத்துவர்