free website hit counter

"கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு கேடு" பஞ்சாப் அரசுக்கு ரூ.2000 கோடி அபராதம் - தேசிய பசுமை தீர்ப்பாயம்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
தேசிய பசுமை தீர்ப்பாயம் பஞ்சாப் மாநில அரசுக்கு ரூ.2,000 கோடி அபராதம் விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திடக்கழிவு மற்றும் திரவக் கழிவுகளை முறையாக மேலாண்மை செய்யாத பஞ்சாப் அரசுக்கு, ரூ.2,000 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகையை சுற்றுச்சூழல் இழப்பீடாக வழங்க பஞ்சாப் அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம்(என்ஜிடி) உத்தரவிட்டுள்ளது. என்ஜிடி தலைவர் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான பெஞ்ச், மாசுபாட்ட தடுப்பதற்கான பஞ்சாப் அரசின் பங்களிப்பு மற்றும் அவர்களின் அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்றத் தவறியதற்கு அந்த மாநில அதிகாரிகள் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கூறியது.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் விவகாரத்தில் பஞ்சாப் அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தது. இருந்த போதிலும், இதுவரை பஞ்சாப் மாநில அரசு, திட மற்றும் திரவக் கழிவுகளை சரியான முறையில் மேலாண்மை செய்யத் தவறிவிட்டது.

பஞ்சாப் அரசை எச்சரித்ததைத் தொடர்ந்து, என்ஜிடி தனது நடவடிக்கையைத் தொடர்ந்தது. இப்போது ரூ.2,000 கோடிக்கு மேல் அபராதம் விதித்துள்ளது.

முன்னதாக, திட மற்றும் திரவக் கழிவுகளை முறையாக மேலாண்மை செய்யாததற்காக சுற்றுச்சூழல் இழப்பீட்டுத் தொகையாக ரூ.3,000 கோடி வழங்குமாறு ராஜஸ்தான் அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.

மேலும், திரவக் கழிவுகளை முறையாக மேலாண்மை செய்யாததற்காக உத்தரபிரதேச அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula