free website hit counter

வரும் 19 ஆம் திகதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு!

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக, வரும் 19 ஆம் திகதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து, தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
தமிழகத்தில், கடந்த 1 ஆம் திதி முதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட மாநகராட்சிகளுக்கு, வரும் 19 ஆம் திகதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் 22 ஆம் திதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில், 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும் 19 ஆம் திகதி விடுமுறை அளித்து பள்ளிக் கல்வித் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். மேலும் 50 சதவீதம் மேல் தேர்தல் பணியில் ஆசிரியர்கள் இருப்பின் அந்தப் பள்ளிகளுக்கு வரும் 18 ஆம் திகதியும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக, வரும் 19 ஆம் திகதி பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: