மும்பையின் பாந்த்ராவில் உள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று அதிகாலை 5 மணியளவில் நடிகர் வசிக்கும் கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே குறைந்தது நான்கு ரவுண்டுகள் சுடப்பட்டன.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் குறித்து உள்ளூர் போலீசார் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
தடய அறிவியல் நிபுணர்கள் குழுவும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், கானை மிரட்டும் மின்னஞ்சல் அவரது அலுவலகத்திற்கு வந்தது, அதைத் தொடர்ந்து மும்பை போலீசார் குண்டர்கள் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி ப்ரார் மீது எஃப்ஐஆர் பதிவு செய்தனர்.