பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பது உறுதி என்று இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விஷயத்தில், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மக்கள் விரும்புவது நிச்சயம் நடக்கும் என்றும் நம் பாதுகாப்பு படையினருடன் இணைந்து பணியாற்றி, நாட்டின் எல்லைகளை காப்பது தன் பொறுப்பு எனவும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இந்தியா மீது தீய கண்ணோட்டத்துடன் இருப்பவர்களுக்கு தக்க பதிலடி தரப்படும் என கூறிய அவர், பிரதமர் மோடி வேலை செய்யும் பாணி, எடுத்த காரியத்தில் உறுதி ஆகியவை குறித்து மக்களுக்கு நன்கு தெரியும் என்று குறிப்பிட்டார்.