free website hit counter

பிரதமர் மோடியுடன் விமானப்படை தளபதி திடீர் சந்திப்பு - பாகிஸ்தானுக்கு எதிராக காய் நகர்த்தும் இந்தியா

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்திற்கு மத்தியில் விமானப்படை தளபதி ஏ.பி.சிங்  திடீரென பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். அப்போது, எல்லையில் இந்திய போர் விமானங்களின் தயார் நிலை குறித்தும் எல்லை நிலவரம் குறித்தும் அவர் பிரதமர் மோடியிடம் விளக்கியதாக கூறப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு உத்தரப்பிரதேசத்தின் ஷாஜகான்பூரில் உள்ள கங்கா விரைவுச் சாலையில் ரபேல், சுகோய் உள்ளிட்ட போர் விமானங்கள் தரை இறக்கி, பறக்க வைக்கும் ஒத்திகையை விமானப்படை மேற்கொண்டது.அவசரகாலங்களில் இச்சாலையை விமானத்தளமாக பயன்படுத்த 3.5 கிமீ தூரத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் இந்த ஒத்திகை நடந்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள ராணுவ தளவாட தொழிற்சாலையில் அதிகாரிகள், ஊழியர்கள் 2 நாட்களுக்கு மேல் விண்ணப்பித்த விடுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த தொழிற்சாலையில் 4,000 பேர் பணியாற்றுகின்றனர். யாருக்கும் 2 நாளுக்கு மேல் விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula