ராஜஸ்தானின் ஜோத்பூரில் வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜோத்பூரில் உள்ள ஜலோரி கேட் மாவட்டத்தில் மதக் கொடிகளை ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து கும்பல்கள் கூடி அங்கு வகுப்புவாத மோதல்கள் வெடித்தாக தெரிவிக்கப்படுகிறது. ஈத் பண்டிகைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அங்கு வெடித்த வன்முறை தொடர்பாக 140 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜோத்பூரில் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை வரை நீடித்த மோதல்கள் காரணமாக அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.