free website hit counter

டெல்லி சென்ற வந்தே பாரத் ரெயிலில் தீ விபத்து

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
மத்திய பிரதேசத்தில் இருந்து டெல்லி செல்லும் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டது.
போபாலில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ரெயில் இன்று காலை 5.40 மணிக்கு போபால் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது.

காலை 8.30 மணியளவில் குர்வாய் கெதோரா ரெயில் நிலையம் அருகே வந்தே பாரத் ரெயில் சென்றபோது 14-வது பெட்டியின் அடிப்பகுதியில் தீ பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் பதற்றம் அடைந்த பயணிகள் அனைவரும் உடனடியாக ரெயிலில் இருந்து இறங்கினர். தீ விபத்து குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் ரெயிலில் பற்றிய தீயை அணைத்தனர்.

இதுகுறித்து ரெயில்வே துறை கூறுகையில், பெட்டியின் அடியில் இருந்த பேட்டரியில் இருந்து தீ ஏற்பட்டதாகவும், உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பயணிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக உயிருக்கோ உடைமைகளுக்கோ எந்த சேதமும் இல்லை. அந்த பெட்டியிலிருந்த சுமார் 22 பயணிகள் வேறு பெட்டிக்கு மாற்றப்பட்டனர்.

வந்தே பாரத் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டது இதுவே முதல்முறை ஆகும்.

"ராணி கமலாபதி ரெயில் நிலையத்தை விட்டு புறப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் C-14 கோச்சில் தீ பிடித்தது தெரிய வந்தவுடன், குர்வாய்-கைதோராவிற்கும் இடையே நிறுத்தப்பட்டு காலை 7.58 மணியளவில் தீ அணைக்கப்பட்டு ரெயில் 10.05 மணியளவில் டெல்லி நோக்கி புறப்பட்டது" என மேற்கு மத்திய ரெயில்வேயின் அதிகாரி ராஹுல் சிரிவாஸ்தவா தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: