free website hit counter

புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயல் பதவியேற்றார்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயல் பதவியேற்றுக்கொண்டார்.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் புதிய தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டாா். 1985-ஆம் ஆண்டு பஞ்சாப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவா், தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா், தோ்தல் ஆணையா் அனுப் சந்திர பாண்டே ஆகியோருடன் தோ்தல் ஆணைய குழுவில் இடம்பெறுவாா்.

தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் வரும் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரியில் பணி ஓய்வு பெற்ற பின்னா், அடுத்த தலைமைத் தோ்தல் ஆணையராக அருண் கோயல் பொறுப்பேற்பாா். பின்னா், 2027-ஆம் ஆண்டு டிசம்பரில் 65 வயதை எட்டும்போது அந்தப் பதவியிலிருந்து கோயல் ஓய்வு பெறுவாா் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப் மாநிலத்தின் கடந்த 1985-ம் ஆண்டு பேட்ஜ் ஐஎஸ்எஸ் அதிகாரி அருண் கோயல். இவர் மத்திய அரசு செயலாளராக பணியாற்றியுள்ளார். மத்திய அமைச்சரவை அலுவலகத்தின் செயலாளர் பதவியிலிருந்து இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

அதன்பின் இவர் கனரக தொழில்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. ஆனால் அவர் சில தினங்களுக்கு தனது பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். மறுநாளே அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: