free website hit counter

இந்தியா - சீனா எல்லை பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக 9,400 வீரர்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இந்தியா-சீன எல்லை பாதுகாப்புக்கு கூடுதலாக 7 பட்டாலியன்களை பணியில் அமர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சீனாவை ஒட்டிய எல்லை பாதுகாப்புக்கு கூடுதல் படைகளை ஏற்படுத்துவது தொடர்பாக மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி சீனாவை ஒட்டிய எல்லையை பாதுகாத்து வரும் இந்தோ - திபெத்தியன் எல்லை போலீஸ் படை (ITBP) பிரிவில் கூடுதலாக 7 பட்டாலியன்களை சேர்க்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இதன்மூலம், கூடுதலாக 9,400 வீரர்கள் இந்த பிரிவில் இணைவார்கள் என்றும், இந்தியா-சீனா எல்லையில் புதிதாக உருவாக்கப்பட உள்ள 47 எல்லை நிலைகளிலும், 12 முகாம்களிலும் இவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1962-ம் ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் ஏற்பட்டதை அடுத்து, இந்தோ-திபெத்தியன் எல்லை போலீஸ் படை சுமார் 90 ஆயிரம் வீரர்களைக் கொண்டதாக பலப்படுத்தப்பட்டது. தற்போது இவர்கள் 3,488 கி.மீ. தொலைவு கொண்ட எல்லையை பாதுகாத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: