பாகிஸ்தான் மற்றும் நேபாள எல்லையை ஒட்டிய மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் போது, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவை கிடைப்பதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள மாநிலபேரிடர் நிவாரண படை , போலீசார் உள்ளிட்டோரை தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
அனைத்து மீடியாக்களிலும் வரும் தேச விரோத பிரசாரங்களை கண்காணிப்பதுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட அமித்ஷா, பாதிக்கப்படக்கூடிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிப்பதுடன், தடையற்ற
தொலைத்தொடர்பு வசதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளார்.
இந்த நிலையில், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், கத்தார், பிரான்ஸ், ஜெர்மனி நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களை தொடர்பு கொண்ட நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கமளித்துள்ளார். அதேபோல் பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஐ.நா.,
பாதுகாப்பு சபை உறுப்பினர்களிடம் வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்து உள்ளது.