இந்த மாத தொடக்கத்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்தக் கோரி இத்தாலி முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வாரம் பதுவா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறவிருந்த 22 வயதான உயிரியல் மருத்துவ பொறியியல் மாணவி எம்.எஸ்.செச்செட்டின் பட்டம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு அவரது முன்னாள் காதலனால் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக பொதுமக்களின் கோபம் மற்றும் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன.
மிலான் மற்றும் நாப்போலியில் பெருந்திரளான மக்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவாக திரண்டதை அடுத்து தலைநகர் ரோமின் மையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பெண்கள் கொலையை பொறுத்துக் கொள்ள முடியாது என இத்தாலி அதிபர் தெரிவித்துள்ள நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தைக் குறிக்கும் வகையில் செர்ஜியோ மேட்டரெல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “உருக்கமான செய்திகள் நாட்டின் மனசாட்சியை உலுக்கிவிட்டன. நாகரீகமாக இருக்க விரும்பும் ஒரு மனித சமூகம், பெண்கள் மீதான இந்த தொடர் தாக்குதல்களையும், கொலைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது, தாங்க முடியாது.” என்று அவர் கூறினார்.
இத்தாலிய உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின் படி, நாட்டில் இந்த ஆண்டு இதுவரை 106 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர., அவர்களில் 55 பேர் தெரிந்தோர் அல்லது முன்னாள் கூட்டாளியால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.