சந்திர கிரகணம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும்.
சந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும், அரைகுறையாக ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. கிரகணம் எல்லா நாடுகளுக்கும் ஒரே நேரத்தில் தென்படாது. மாறாக வெவ்வேறு நேரங்களிலேயே தென்படும். கிரகணத்தின் போது புவி மேற்பரப்பில் வெளிச்சம் குறைவதை காணலாம்.
இன்று 28.10.2023 ஐரோப்பாவில் தெரிந்த பார்சுவ சந்திர கிரகணம், ஐரோப்பிய நேரம் இரவு 08.01 க்கு ஆரம்பமாகியது. இரவு 10.14 மணி நிமிடத்தில் உச்சநிலைக்கு வந்து பின்னர் 10.52 மணிக்கு குறைநிலையடைந்து, நள்ளிரவு 12.26க்கு நிறைவு என்ற வகையில் மொத்தம் 4 மணித்தியாலங்களும், 25 நிமிடங்களுமாக இருந்தது.
ஐரோப்பாவில் இன்று தெரிந்த சந்திரகிரகணம், பல்வேறு இடங்களில் தோன்றிய காட்சிகளின் சில பதிவுகள்....
நோர்வேயில் கிரகண ஆரம்பநிலை.
நோர்வேயில் கிரகண உச்சநிலை
ஜேர்மனியில்
இலண்டனில்
போர்த்துக்கல்லில்
இத்தாலி - சார்டெனியாவில்
நோர்வேயில் கிரகண நிறைவு
இத்தாலியில் கிரகண நிறைவு