இத்தாலியின் சிசிலியின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஐரோப்பாவின் மிக உயர்ந்த எரிமலையான மவுண்ட் எட்னா வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் வெடித்தது. இதன் போது தீவின் கிழக்கே இரவு வானத்தில் எரிமலை ஊற்றுகள் ஒளிர்ந்தவண்ணம் பாய்ந்தன.
காடானியாவில் உள்ள இத்தாலிய புவி இயற்பியல் மற்றும் எரிமலைக் கழகத்தின் (INGV) படி, எரிமலை ஊற்றுகள் வெள்ளிக்கிழமை மாலை கடல் மட்டத்திலிருந்து 6,000 மீட்டர் உயரம் வரை பாய்ந்தன.
எரிமலை கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ந்து செயலில் இருந்துள்ள நிலையில் அதன் வெடிப்புகள் அரிதாகவே குறிப்பிடத்தக்க சேதத்தையே ஏற்படுத்தின.
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் கூற்றுப்படி, எரிமலை 500,000 ஆண்டுகளுக்கு பழமையானது மற்றும் குறைந்தது 2,700 ஆண்டுகள் இந்த எரிமலை நடவடிக்கை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இது உலகின் சிறந்த ஆய்வு செய்யப்பட்ட மற்றும் கண்காணிக்கப்பட்ட எரிமலைகளில் ஒன்றாகும்.