இந்த வாரத்தின் சில மாலைகளில் ஐரோப்பாவில் ஆங்காங்கே தெரிந்த வண்ண முகில் கூட்டங்கள் கண்டு மக்கள் ஆச்சரியமும், பரவசமும், அடைந்தார்கள்.
அவை வட துருவப் பகுதியில் காணக் கூடிய Northern Lights ஒளிக் கீற்றுக்கள் என்றும், கருதினார்கள். ஆனால் துருவ ஒளிக்கீற்று அல்ல மாறாக பனி உறைந்த மேகக் கூட்டங்கள் என வானியல் அறிஞர்கள் விளக்கியுள்ளார்கள்.
வானியலில் இவை "உயர் உயர மேகங்கள் அல்லது சிரஸ் மேகங்கள் high-altitude clouds or cirrus clouds என அழைக்கப்படுபவை. சிறிய பனி படிகங்களாலான மேகத் துகளுக்குள் சூரிய ஒளி புகுந்து பல்வேறு வண்ணங்களைப் பிரதிபலித்தன. மழைத்துளிகனால் தோன்றும் வானவில்லை ஒத்ததான ஒரு வானியல் இயங்குதல் என அறிஞர்கள் விளக்கியுள்ளார்கள். இப்போதுள்ள காலநிலையில் வண்ணக் கோலங்கள் உண்மையிலேயே மனம் மயக்குபவை. மக்கள் வானத்தில் இவற்றைப் பார்த்து மயக்குவது இயல்பே என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.