free website hit counter

சுவிற்சர்லாந்தில் மீண்டும் அதிகரிக்கும் கோவிட் தீவிர சிகிச்சைப் பிரிவுச் சேர்க்கைகள் !

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுவிற்சர்லாந்தில் கோவிட் - 19 தொடர்பாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது ஐரோப்பிய மட்டத்தில் சுவிற்சர்லாந்திலேயே அதிகமான ஐசியு நோயாளிகள் உள்ளனர்தாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

அவை மேலும் கூறுகையில், இது தொடர்பான புள்ளிவிபரங்களினடிப்படையில், வேறு எந்த ஐரோப்பிய நாட்டையும் விட சுவிற்சர்லாந்தின் மருத்துவமனைகளில் அதிக கோவிட் தொடர்பான ஐசியு சேர்க்கைகள் உள்ளன எனவும், நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகள் இதன் காரணமாக அறுவை சிகிச்சைகள் மற்றும் பிற அவசரமற்ற செயல்பாடுகளை ஒத்திவைக்கத் தொடங்கியுள்ளதாகவும், இது தொற்றுநோயின் ஆரம்ப கட்டங்களின் காட்சிகளை பிரதிபலிப்பதாகவும் விவரிக்கின்றன.

சமீபத்திய புள்ளிவிவரங்கள் நாட்டின் 81 சதவிகித ஐசியு படுக்கைகள் நிரம்பியுள்ளன என்பதைக் குறிப்பிடுகின்றன. தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களில் பாதி பேர் கோவிட் தொடர்பான நோய்களால் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஐசியுவில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போடப்படாதவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது சுவிற்சர்லாந்தில் உள்ள ஐசியுவில் 34.8 பேர் உள்ளதாகவும், இது பிரான்சில் 33.7 எனவும், மற்றும் ஸ்பெயினில் 31.9 ஐ விட அதிகமாவும், ஏனைய பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் சேர்க்கை விகிதங்கள் மிகவும் குறைவாகவும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுவிற்சர்லாந்தின் அண்டை நாடான ஆஸ்திரியாவில், ஒரு மில்லியன் மக்களுக்கு ஐசியுவில் வெறும் 12.5 பேர் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிற்சர்லாந்தில் உலகத்தரம் வாய்ந்த சுகாதார அமைப்பு இருந்தபோதிலும்,நாட்டில் ஐசியு சேர்க்கை ஏன் அதிகம் என்ற கேள்விக்கு, இரண்டு சாத்தியமான காரணங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒன்று நாட்டின் பின்தங்கிய தடுப்பூசி விகிதம். மற்றையது வைரஸ் பரவுவதைத் தடுக்க சுவிஸ் நடைமுறையில் ஒப்பீட்டளவில் உள்ள தளர்வான நடவடிக்கைகள் எனக் கூறப்படுகிறது.

சுவிற்சர்லாந்தில் பல மாதங்களாக ஏராளமான தடுப்பூசி அளவுகள் இருந்தபோதிலும், ஐரோப்பாவின் பெரும்பகுதியை விட, தடுப்பூசி விடயத்தில் சுவிஸ் பின்தங்கியே உள்ளது. செப்டம்பர் 5ம் திகதி நிலவரப்படி, சுவிஸ் பொது மக்களில் வெறும் 51 சதவீதம் பேருக்கு மட்டுமே முழு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவே ஐரோப்பிய ஒன்றியத்தில் 59 சதவிகிதமாகவும், ஜெர்மனியில் 60 சதவிகிதமாகவும், பிரான்சில் 61 சதவிகிதமாகவும் மற்றும் இங்கிலாந்தில் 63 சதவிகிதமாகவும் உள்ளது.

குறிப்பாக தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து. தொற்றுநோய் தொடங்கியதிலிருந்தும், சுவிற்சர்லாந்தில் தடுப்பூசி சந்தேகம் மற்றும் கோவிட் மறுப்பாளர்களின் குறிப்பிடத்தக்க எதிர்ப்புகள், ஆர்ப்பாட்டங்களஜ என்பனவற்றால், மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை விட சுவிற்சர்லாந்து தடுப்பூசித் திட்டத்தில் பின்தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல வைரஸ் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கான சுவிற்சர்லாந்தின் நடவடிக்கைகள் ஐரோப்பாவின் பெரும்பகுதிகளில் காணப்பட்டதை விட மிகக் குறைவானவை என்றும் சொல்லப்படுகிறது.

அன்மையில், சுவிஸ் உணவகங்கள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் தனியார் விருந்துகளில் கோவிட் சான்றிதழ்களை கட்டாயமாக்கும் திட்டம், செப்டம்பர் 1 புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட போதும், உடனடியாக அமுலுக்கு வரவில்லை. ஆயினும் செப்டம்பர் 8ம் திகதி அரசாங்கமும் நிபுணர்களும் சந்திக்கும் போது, ​​ இந்த திட்டம் அங்கீகரிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction