சுவிற்சர்லாந்து கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் நான்காவது அலைக்கு உட்படும், ஆனால் அது வித்தியாசமாக இருக்கும் என சுவிற்சர்லாந்தின் சுகாதாரம் மற்றும் உள்துறை அமைச்சரும், மத்திய கூட்டாட்சி உறுப்பினருமான அலைன் பெர்செட் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் செய்திச் சேவையொன்றிற்கு அவர் அளித்த பேட்டியொன்றில், " கொரோனா வைரஸின் நான்காவது அலையில் இருந்து சுவிற்சர்லாந்து தப்பித்துக் கொள்ள முடியாது. ஆனால் இது இன்னும் முந்தைய மூன்று அலைகளிலுமிருந்து வித்தியாசமாக இருக்கும் என அவர் மேலும் கூறினார்.
அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. குறிப்பாக 50 வயதிற்குட்பட்டவர்களுக்கும் கூட அதிகம் போடப்படுகிறது. தற்போது, நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் எதிர்காலத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் எனவும் அவர் கூறினார்.
அவரது கூற்றுப்படி, தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு மூன்றாவது பூஸ்டர் டோஸ் தேவையா என்று இப்போது சொல்வது கடினம். ஆனால் இந்த முடிவு மருந்து நிறுவனங்களால் எடுக்கப்படாது என்பதில் மட்டும் அரசு உறுதியாக உள்ளது. இந்த விடயத்தை, கூட்டமைப்புக் கவுன்சில் உரிய நிபுணர்களுடன் கவனமாக ஆராயும். ஆனால் குறிப்பாக வயதானவர்களுக்கு மூன்றாவது ஊசி உதவியாக இருக்கும் என்பதாகும்.