ஒருகாலத்தில் தட்டச்சு பொறிகளுக்கு பெரும் மவுசு இருந்துவந்தது.
இப்போது பழம்பெரும் சாதனமாகிப்போன தட்டச்சுபொறி கருவிகளில் இன்றைய நவீன கலைஞர்கள் பல்வேறு மாற்றுப்பயன்பாடுகளைக் கண்டறிந்துள்ளனர்.
கீபோர்டில் உள்ள எழுத்துக்களை மட்டும் பயன்படுத்தி ஒரு கலைஞர் புகழ்பெற்ற ஓவியங்களை மீண்டும் உருவாக்குவதை நாம் பார்த்திருக்கிறோம். தட்டச்சுப்பொறிகளைப் பிரித்தெடுத்து, அசையும் பறவை சிற்பங்களாக மீண்டும் இணைக்கப்படுவதைப் போன்ற பல சோதனை அணுகுமுறைகளையும் நாங்கள் பார்த்திருக்கிறோம்.
இப்போது, இந்த விண்டேஜ் கருவி; காட்சி கலைகளுக்கு அப்பால் பயன்படுத்தப்படுகிறது. 'பாஸ்டன் டைப்ரைட்டர் ஆர்கெஸ்ட்ரா' என்று அழைக்கப்படும் இசைக்குழு இந்த பழங்கால இயந்திரங்களை இசைக்கருவிகளாகப் பயன்படுத்தி பாடல்களை உருவாக்குகிறது.
மேலும் குறிப்பிட்ட இசைப்போட்டி ஒன்றுக்கு இந்த இசைக்குழு பிரபல பாடலை தட்டச்சுக்கருவிகளில் வாசித்து வீடியோவில் பதிவு செய்து அனுப்பியுள்ளனர்.
இந்த இசைக்குழு; தட்டச்சுக்கருவிகளை இசைக்கருவிகளாக எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை காணொளியில் காணலாம்.