free website hit counter

நிறம் மாறாத முகம் !

பார்வைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஈழத் தமிழ் மக்கள் மீதான கரிசனை மிக்க தென்னிலங்கை அறிவியலாளரும், அரசியல்வாதிகளில் முக்கியமானவர் எனச் சொல்லத்தக்கவருமான, கலாநிதி. விக்கிரமபாகு கருணாரத்தின (Wikramabahu Karunaratne) மறைந்தார்.

நீண்டகாலமாக சுகவீனமுற்றிருந்த அவர், கொழும்பு அரச பொது மருத்துவமனையில் நேற்று  ( 24.07.2024) இரவு தனது 81-ஆவது அகவையில் காலமானார்

தென்னிலங்கையின் லுணுகலையிலுள்ள  ஒரு கல்விக் குடும்பத்தில் 1943 ஆண்டு  பிறந்த அவர், கல்வியில் முன்னேறி, இலங்கைப் பல்கலைக்கழகத்தில், மின்பொறியியலில் சிறப்புப் பட்டமும், பின்னர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 

கலாநிதிப்பட்டத்துடன்  இலங்கை திரும்பிய அவர்  பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியபோதும்,  அரசியல் போராட்டங்களில் கலந்துகொண்டமையால் பல தடவைகள் பணிநீக்கம் செய்யப்பட்டார்.  

இடதுசாரிக் கொள்கைகள் கொண்ட அவர், ஈழத்தமிழ் மக்கள் மீதான கலவரங்கள், தாக்குதல்களுக்கு  எதிராக சிங்கள மக்கள் மத்தியில் எழுந்த மிகச் சொற்பமான குரல்களில் ஒன்றாக இருந்தார்.  ஆனால் அவரது குரலின் உண்மை,  தென்னிலங்கை அரசியல்வாதிகளினால் தொடர்ந்து மறுக்கப்பட்டது. சிங்கள மக்களிடம் மழுங்கடிக்கப்பட்டது.

தென்னிலங்கையில் அவருடன் இணைந்து இடசாரிச் சித்தாந்தத்தில் அரசியற்கட்சி ஆரம்பித்த பலரும், நிறம் மாறிப்போன போதும், இறுதிவரை செஞ்சட்டைக்காரனகவே இருந்து மறைந்துள்ளார் விக்கிரமபாகு கருணாரத்தின. அஞ்சலிகள் !

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula