பொலிஸ் மா அதிபரின் நியமனம் தொடர்பில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
“ஜனாதிபதி இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பிக்க முடியாது. அவர் இன்னும் ஜனாதிபதியாக இருக்கிறார். ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் என்பதற்காக அவர் தனது பொறுப்புகளில் இருந்து விலக முடியாது. அவரால் இதைச் செய்ய முடியாவிட்டால், ஜனாதிபதியை பதவி விலகச் சொல்லுங்கள்” என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
இதனையடுத்து , பொலிஸ் மா அதிபரை (IGP) நியமிப்பதற்கான தீர்மானம் சரியானது, சட்டமானது, அரசியலமைப்பிற்கு உட்பட்டது மற்றும் நல்லெண்ண அடிப்படையில் எடுக்கப்பட்டது என பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் தொடர்பான நிலைமையை ஜனாதிபதியால் கூட தீர்க்க முடியாது எனவும், தேவைப்பட்டால் நீதிமன்றில் தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பதவி காலியாக இல்லாததால் புதிய நியமனம் செய்ய முடியாது என ஆளும் கட்சி எம்.பி.க்கள் வாதிட்ட நிலையில், பொறுப்பு ஐ.ஜி.யை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வாதிட்டனர். (4TamilMedia)