வெப்பத்தின் பிடிக்குள் மெல்ல சென்றுகொண்டிருக்கும் காலநிலையில் மூளையை சூடேற்றி சுறுசுறுப்பாக்க ஒரு புத்தகம் கிடைத்தது.
வேலைப்பழுவுக்கும் வெப்பத்திற்கும் காற்றோற்றமாக அமைந்த பவுலோ கோய்லோவின் "The Alchemist" புத்தகத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பான ரசவாதி புத்தகமே அது. தத்துவங்களும் எதார்த்தங்களும் நிறைந்த ஆழமான சிந்தனையை தூண்டும் இடையனின் கதை ; பயணமாவது ஸ்பெயினிலிருந்து எகிப்தின் பிரமிட்ஸ் வரை. அங்கே பாலைவனத்தை தாண்டி பிரமிட்ஸ்சை அடைவதற்குள் ஏற்படும் சவால்கள் வாழ்வதற்கு பாடம் புகட்டி வழிகாட்டிவிட்டு முடிகிறது. மிகப்பிரபலமானதும் அதிக விற்பனையையும் கொண்ட இந்த புத்தகம் இல்லாத வீடுகளே இல்லை.
இந்தக் கதையின் பெரும்பகுதி பாலைவனத்தின் அமைதி தன்மையையும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையையும் தொடர்ந்து சொல்லிய வண்ணம் நகரும் . அங்கு வீசும் காற்றின் இயல்புகள் மாறுபடுவதோடு இரவில் வெப்பநிலை சடுதியாக குறைந்து குளிரும் குடிகொள்ளும் என்பன போன்ற சில விடயங்களை விளக்கியிருப்பார் பவுலோ. இதன் பின் பாலைவனம் குறித்த தேடலில் சஹாரா பற்றிய சுவாரஸ்யங்கள் கிடைத்தன.
உலகின் மிகப்பெரிய பாலைவனமான சஹாரா பாலைவனத்தை வெறும் மணற்காடாக முற்றிலும் ஒதுக்கிட முடியாது. சஹாராவில் எதிர்பார்க்கும் பல்வேறு இயற்கை காட்சிகள் அடங்கியிருப்பது உண்மையே.
சஹாரா பாலைவனம் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி, செங்கடலில் இருந்து அட்லாண்டிக் பெருங்கடல் வரை நீண்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய வெப்பமான பாலைவனங்களில் ஒன்றாகும் என்பது புவியில் பாடத்தில் அறிந்திருப்போம்.
மாலி; மொரிட்டானியா; நைஜர்; சாட்; சூடான்; அல்ஜீரியா; துனிசியா; மொராக்கோ; லிபியா மற்றும் எகிப்து ஆகிய 10 நாடுகளில் சஹாரா பரவியுள்ளது.
ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்பரப்பில் கிட்டத்தட்ட 30% (கிட்டத்தட்ட 9 மில்லியன் சதுர கிலோமீட்டர்) ஆக்கிரமித்துள்ள இந்தப் பகுதி, பல்வேறு நிலப்பரப்புகளால் ஆனது. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெயர்களால் அழைக்கப்படுகிறது.
1. எர்க் (The erg) : பாலைவனம்' என அஞ்சல் அட்டைகளில் அடையாளப்படுத்தப்படும் பகுதி
மிகவும் குறிப்பிட்ட பெரிய மணல் திட்டுகள் என்று அழைக்கப்படும் சஹாரா பாலைவனத்தின் நிலப்பரப்பு. இங்கே கடுமையான வெப்பநிலையின் ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், இந்த மணல் விரிவுகள், மிகவும் வினோதமாகத் தோன்றுகின்றன, அவை வளமான பல்லுயிர்ப் பெருக்கத்தின் இருப்பிடமாக உள்ளன: முயல்கள், ஒட்டகங்கள், அடாக்ஸ் (வெள்ளை மான்கள்), பல்லிகள், சிமிட்டர்-கொம்புகள் கொண்ட மான் இனங்கள் போன்றவை வசிக்கின்றன.
2. ரெக் ( The reg) : வட ஆப்பிரிக்க கல் பாலைவனங்கள்
இவை ரெக்ஸ் கற்கள் மற்றும் கூழாங்கற்களின் பாலைவன பிரதேசமாக உள்ளது. சந்திர கிரகனத்தைப்போல் பெரிய சமவெளிகளை உருவாக்குவதுடன் இதன் வினோதமான இயற்கை சூழலில், நீங்கள் காளான் போன்ற கற்களைப் பார்க்க முடியும்.
3. ஹமாடா (Hamada) : சஹாரா பாலைவனத்தின் பீடபூமிகள்
இவை சற்று உயரமான பீடபூமிகள், கற்திட்டுக்கள் போன்ற தோற்றத்தில் உள்ளன. உண்மையில், அவை கூழாங்கற்கள் மற்றும் கற்களால் உருவாக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். கடல் மட்டத்திலிருந்து சுமார் 550 மீட்டர் உயரத்தில் உள்ள டின்ஹெர்ட்டின் பாறை பீடபூமி அல்ஜீரிய பாலைவனத்தில் உள்ள ஹமாடாவின் சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். சஹாராவின் கோடை கால வெப்பநிலை இந்த பகுதியில் மேலும் 50 டிகிரி செல்சியஸ் வரை உயரும்.
4. வாடி(Wadi) : பசுமை சஹாராவின் மிச்சம்
இவை ஆறுகள் அல்லது நீரோடைகளின் படுக்கைகள். எப்பொழுதும் வறண்டு இருக்கும், அவை ஒரு சில மரங்கள் நிறைந்த சமவெளிகளை உருவாக்குகின்றன. 5000 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பசுமை சஹாராவின் கடைசி சாட்சிகளாக உள்ளன.
5. ஒயாசிஸ் (Oasis) : ஆப்பிரிக்க பாலைவன சோலை
இவை மாயாஜாலமாக இருந்தாலும், சோலைகள் இயற்கையாக ஏற்படுவதில்லை. அவை மனித நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை. உண்மையில், மக்கள் சில பயிர்களை வளர்ப்பதற்காக, ஒரு சில மரங்களை, பெரும்பாலும் பேரீச்சம்பழங்களை நடுவதற்கு நீர்ப்பாசன துளைகளை (நிலத்தடி நீர் அல்லது ஆற்றின் படுகை) பயன்படுத்துகின்றனர். இங்குள்ள வெப்பநிலை புத்துணர்ச்சியூட்டுவதாகவும், சஹாரா பாலைவனத்தின் கடுமையான காலநிலையைத் தாங்கவும் உதவுகிறது.
6. சஹாராவின் சிகரங்கள்
சஹாரா பாலைவனத்தில் மலைகளையும் நீங்கள் காணலாம், அங்கு வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும். அட்லஸ் மிகவும் பிரபலமான மலைத்தொடர். இது கிழக்கிலிருந்து மேற்காக பாலைவனத்தைக் கடந்து வட ஆபிரிக்காவின் மிக உயர்ந்த சிகரங்களைக் கொண்டுள்ளது.
7. தாசிலி (Tassili)
பாலைவன மணற்கற்பாறைகள் அரிக்கப்பட்டு கண்கவர் சிற்பங்களை உருவாக்கப்பெற்றிருக்கும் இடம். அவை லிபியாவில், தாசிலி மாகிடெட்டில் காணப்படுகின்றன.
ரசவாதி கதையில் வருவதுபோல் பாலைவன சூழலை அவதானித்தால் ரசிக்கலாம். பயணித்தால் பரவசமடையலாம். அமைதியும் அனுபவமும் கிடைக்கலாம்.
Source : forclaz