தொலைபேசி மூலம் நேரடி இசையை வழங்கும் முயற்சியே ஸ்டிரீமிங் சேவைக்கான மூல விதை என பார்த்தோம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இது நிகழ்ந்து விட்டாலும், ஸ்டிரீமிங் என்பது தனது காலத்தை முந்தைய சேவையாக இருந்தது. எனவே தான் நாமறிந்த வகையில், ஸ்டிரீமிங்கை அறிமுகம் செய்து கொள்ள ஒரு நூற்றாண்டுக்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தது.
ஓடிடி - ஆஹாவென எழும் திரைப்புரட்சி - 3
எந்த ஒரு உள்ளடக்கத்தையும் (ஆடியோ, வீடியோ) நேரடியாக பெற வழி செய்யும் ஸ்டிரீமிங் சேவை திடிரென ஒரு நாளில் அறிமுகமாகிவிடவில்லை. தொழில்நுட்ப துறையில் ஏற்பட்ட பல்வேறு முன்னேற்றங்களே படிப்படியாக ஸ்டீரிமிங் சேவைக்கு வழிவகுத்தன.
ஓடிடி - ஆஹாவென எழும் திரைப்புரட்சி - 2
ஓடிடி என சொல்லப்படுவதை மிக எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் எனில், இணையம் வழியே திரைப்படம் அல்லது தொலைக்காட்சி தொடரை பார்ப்பது என புரிந்து கொள்ளலாம். அல்லது நெட்பிளிக்ஸ் போன்ற சேவைகள் மூலம் படம் பார்ப்பது என குறிப்பிடலாம்.
ஓடிடி - ஆஹாவென எழும் திரைப்புரட்சி !
ஸ்டீரிமிங் மீடியாவான ஓடிடி சேவை, சினிமா மீது ஏற்படுத்திக்கொண்டிருக்கும் தாக்கத்தையும், அதன் எதிர் கால போக்கை எவ்விதம் தீர்மானிக்கும் என்பதையும், இவற்றின் பின்னே உள்ள தொழில்நுட்ப அடிப்படைகளையும் அலசும், 4தமிழ்மீடியாவின் சுவாரஸ்யமான புதிய தொழில் நுட்பத் தொடர்.
20 ஆயிரம் இந்திய இளைஞர்களை அழைக்கிறது அமேசான்!
இணைய வர்த்தகத்தில் உலக அளவில் கொடிகட்டிப் பறக்கும் நிறுவனம் அமேசன். இந்தியாவுக்கான அதன் கிளை நிறுவனம் அமேசான் இந்தியா என்று அழைக்கப்படுகிறது.
OTT - ஆஹாவென எழும் திரைப்புரட்சி !
ஸ்டீரிமிங் மீடியாவான ஓடிடி சேவை, சினிமா மீது ஏற்படுத்திக்கொண்டிருக்கும் தாக்கத்தையும், அதன் எதிர் கால போக்கை எவ்விதம் தீர்மானிக்கும் என்பதையும், இவற்றின் பின்னே உள்ள தொழில்நுட்ப அடிப்படைகளையும் அலசும் சுவாரஸ்யமான தொடர்.
ட்விட்டர் அறிமுகபடுத்தியிருக்கும் #fleets : இது ட்விட்டரின் ஸ்டோரி!
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் ஸ்னாப்சாட்டி வரிசையில் இப்போது ட்விட்டரும் இணைகிறது.
'fleets' எனப்படும் தனிப்பட்ட கதையோட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது, அதாவது 24 மணிநேரம் மட்டும் நீடிக்கும் ட்விட்டர் ஸ்டோரி இது.
ட்விட்டரில் பலருக்கு தங்களது எண்ணங்களை விரைவாக ஒரு கணத்தில் வெளியிட யோசிப்பார்கள். இதுவரை காலமும் ட்விட்டர் கிஸ்ட்ரியில் அவை சேமிக்கப்பட்டு இருக்கும், மீண்டும் அதை தேடிப்போகையில் தொல்லைத்தரலாம்.
அவர்களுக்காகவே இப்போது இந்த #fleets எனும் இடைக்கால எண்ணங்களை இடுகையிடுவதற்கான வழியாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியாவில் ios மற்றும் Android பாவனையாளர்களுக்கு விரைவில் புதுப்பிக்கப்பட்ட வெர்சனா வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக மேடையில் உடைந்த கண்ணாடி! :சமாளித்த டெஸ்லா இயக்குனர்
இவை பேஸ்புக், இன்ஸ்டகிராம் போலவே 24 மணி நேரத்திற்குப் பிறகு மறைந்துவிடும், இது எப்போதும் ஆன்லைனில் தங்களது கருத்துக்களை அடிக்கடி பதிவிடுவோருக்கு பயனளிக்கலாம்.
"ஃப்ளீட்ஸ் என்று அழைக்கப்படும் விருப்பங்கள், மறு ட்வீட்ஸ் அல்லது பதில்கள் இல்லாமல் நீங்கள் சத்தமாக சிந்திக்க ஒரு வழியை நாங்கள் சோதித்து வருகிறோம்! அவை 24 மணி நேரத்திற்குப் பிறகு மறைந்தும்விடும் இது சிறந்ததுதானே?! " என்று ட்விட்டர் இந்தியா ட்வீட் செய்து வெளியிட்டுள்ளது.
மறந்துவிடுங்கள்! அன்பான மக்களே! - 4தமிழ்மீடியா June : 2020
ஆனால் இதற்கு பல நேர்மறை மற்றும் எதிர்மறை விமர்சனங்களும் எழுந்துள்ளன. ட்விட்டரிலேயே பலரும் புதிய அறிமுகமான "ஃப்ளீட்ஸ்" செயலியை ட்ரோல் செய்து வருகிறார்கள்.
அப்படியாக பதிலளித்தவர்களில் முன்னாள் ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சரும் ஒருவர். அவர்:
"எனதருமை ட்விட்டரே எனக்கு #ஃப்ளீட்ஸ் தேவையில்லை. நான் ட்வீட் செய்யும் போது இது போன்ற ஒரு அம்சத்தை நான் இழந்ததாக உணரவில்லை. நான் மிகவும் மிஸ் செய்யும் ஒரு அம்சம் என்னவென்றால் ட்வீட்ஸில் சிறிய தவறுகளை திருத்தும் திறன்; அதாவது அவற்றை நீக்காமலே அதனை திருத்தும் திறன். நன்றி" என கூறியுள்ளார்.
எமது ட்விட்டர் பக்கத்தை பின் தொடர : @4tamilmedia