free website hit counter

ட்விட்டர் அறிமுகபடுத்தியிருக்கும் #fleets : இது ட்விட்டரின் ஸ்டோரி!

தொழில்நுட்பம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் ஸ்னாப்சாட்டி வரிசையில் இப்போது ட்விட்டரும் இணைகிறது.

'fleets' எனப்படும் தனிப்பட்ட கதையோட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது, அதாவது 24 மணிநேரம் மட்டும் நீடிக்கும் ட்விட்டர் ஸ்டோரி இது.

ட்விட்டரில் பலருக்கு தங்களது எண்ணங்களை விரைவாக ஒரு கணத்தில் வெளியிட யோசிப்பார்கள். இதுவரை காலமும் ட்விட்டர் கிஸ்ட்ரியில் அவை சேமிக்கப்பட்டு இருக்கும், மீண்டும் அதை தேடிப்போகையில் தொல்லைத்தரலாம்.

 

அவர்களுக்காகவே இப்போது இந்த #fleets எனும் இடைக்கால எண்ணங்களை இடுகையிடுவதற்கான வழியாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியாவில் ios மற்றும் Android பாவனையாளர்களுக்கு விரைவில் புதுப்பிக்கப்பட்ட வெர்சனா வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக மேடையில் உடைந்த கண்ணாடி! :சமாளித்த டெஸ்லா இயக்குனர்

இவை பேஸ்புக், இன்ஸ்டகிராம் போலவே 24 மணி நேரத்திற்குப் பிறகு மறைந்துவிடும், இது எப்போதும் ஆன்லைனில் தங்களது கருத்துக்களை அடிக்கடி பதிவிடுவோருக்கு பயனளிக்கலாம்.

"ஃப்ளீட்ஸ் என்று அழைக்கப்படும் விருப்பங்கள், மறு ட்வீட்ஸ் அல்லது பதில்கள் இல்லாமல் நீங்கள் சத்தமாக சிந்திக்க ஒரு வழியை நாங்கள் சோதித்து வருகிறோம்! அவை 24 மணி நேரத்திற்குப் பிறகு மறைந்தும்விடும் இது சிறந்ததுதானே?! " என்று ட்விட்டர் இந்தியா  ட்வீட் செய்து வெளியிட்டுள்ளது.

மறந்துவிடுங்கள்! அன்பான மக்களே! - 4தமிழ்மீடியா June : 2020

ஆனால் இதற்கு பல நேர்மறை மற்றும் எதிர்மறை விமர்சனங்களும் எழுந்துள்ளன. ட்விட்டரிலேயே பலரும் புதிய அறிமுகமான "ஃப்ளீட்ஸ்" செயலியை ட்ரோல் செய்து வருகிறார்கள்.

அப்படியாக பதிலளித்தவர்களில் முன்னாள் ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சரும் ஒருவர். அவர்:

"எனதருமை ட்விட்டரே எனக்கு #ஃப்ளீட்ஸ் தேவையில்லை. நான் ட்வீட் செய்யும் போது இது போன்ற ஒரு அம்சத்தை நான் இழந்ததாக உணரவில்லை. நான் மிகவும் மிஸ் செய்யும் ஒரு அம்சம் என்னவென்றால் ட்வீட்ஸில் சிறிய தவறுகளை திருத்தும் திறன்; அதாவது அவற்றை நீக்காமலே அதனை திருத்தும் திறன். நன்றி" என கூறியுள்ளார்.

எமது ட்விட்டர் பக்கத்தை பின் தொடர : @4tamilmedia

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction