பல்வேறு இதய நோயால் இறப்பதை எதிர்த்து போராடுவதற்கான ஒரு வழியாக, செப்டம்பர் 29 அன்று உலக இருதய தினம் ஒவ்வொரு ஆண்டும் அனுஷ்டிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், 17 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதய நோயால் இறக்கின்றனர். உலக சுகாதார அமைப்புடன் இணைந்து உலக விடுமுறை தினத்தை உலக இதய கூட்டமைப்பு நிறுவியது. 1997 முதல் 1999 வரை உலக இதய கூட்டமைப்பின் தலைவர் அன்டோனி பேஸ் டி லூனா இந்த யோசனையை உருவாக்கியிருந்தார். வருடாந்திர நிகழ்வின் முதல் கொண்டாட்டம் செப்டம்பர் 24, 2000 அன்று நடந்தது, பின்னர் செப்டம்பர் 29ஆம் திகதி உலக இதய தினம் கடைபிடிக்கப்பட்டது.
இவ்வாண்டும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நிரல்களை உலக இருதய கூட்டமைப்பு ஒழுங்கு செய்துள்ளது. அவ்வகையில் இருதய நாளான இன்று உங்கள் நகரத்தில் இதய வடிவில் நடக்கவோ, ஓடவோ அல்லது சைக்கிளில் செல்லவோ சவால் ஒன்றை விடுத்துள்ளனர்.
நீங்கள் எவ்வளவு தூரம் செய்தாலும், ஒவ்வொரு அடியும் உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு முக்கியம். 29 செப்டம்பர் 2022க்குள் முடிந்தவரை பல நகரங்களில் பல இதயங்களைப் பார்க்க விரும்புகிறோம். தனியாகவோ அல்லது குழுவாகவோ இருந்தாலும், உங்கள் இதய வடிவத்தை உருவாக்கி, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என அறிவித்துள்ளனர். உலக நாடுகளிலிருந்து பலரும் இந்த சவாலை ஏற்றுக்கொண்டு இருதய வடிவமாக தாம் மேற்கொண்ட நடை, ஓட்டம், சைக்கிள் பயிற்சிகளை நிலப்படமாக பகிர்ந்துவருகிறார்கள் : இணைப்பு